Resultado encontrado

Kathaigalai Pesum

G. V. Prakash feat. Benny Dayal & Hamsika Iyer
Enviar Pesquisar

கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச, என்னுயிரே
காதல் சுடுதே
காய்ச்சல் வருதே

ஓ கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச, என்னுயிரே
காதல் சுடுதே
காய்ச்சல் வருதே

ஓ என்னை கேளாமல்
எதுவும் சொல்லாமல்
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே
ஓ இருளும் இல்லாமல்
ஒளியும் இல்லாமல்
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே

ஓ கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச, என்னுயிரே
காதல் சுடுதே
காய்ச்சல் வருதே

கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது
வருகிற வாசனை நீயல்லவா
உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும்
சர்க்கரை தடவிய நொடியல்லவா
கல்லும் மண்ணும்
ஓ வீடுகளில்லை
ஓ அன்பின் வீடே
ஓ அழிவது இல்லை
வெறும் கரையில்
படுத்துக்கொண்டு
விண்மீன் பார்ப்பது யோகமடா
உன் மடியில்
இருந்தால், வாழ்க்கையில்
எதுவும் தேவையே இல்லையடி

ஓ கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச, என்னுயிரே
காதல் சுடுதே
காய்ச்சல் வருதே

உனக்குள் தொடங்கி
உனக்குள் தானே
எந்தன் உலகம் முடிகிறதே
உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே
எந்தன் நாட்கள் விடிகிறதே
ஓ இரவின் மடியில்
ஓ குழந்தைகள் ஆவோம்
ஓ இருட்டில் நதியில்
ஓ இறங்கி போவோம்
நேற்றென்னும், சோகம்
நெருப்பாய் வந்து தீ மூட்டும்
இன்றென்னும், மழையில்
அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே

கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச, என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே
ஓ என்னை கேளாமல்
எதுவும் சொல்லாமல்
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே
ஓ இருளும் இல்லாமல்
ஒளியும் இல்லாமல்
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே
ஓ என்னை கேளாமல்
எதுவும் சொல்லாமல்
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே
ஓ இருளும் இல்லாமல்
ஒளியும் இல்லாமல்
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே

Observação

Resultado automático

Esta letra foi encontrada automaticamente e pode precisar de revisão.

Quando ela for adicionada ao catálogo principal do EMXStudio, poderá receber tradução, correção, categoria, artista vinculado e informações completas.