Resultado encontrado

Ennadi Raakkamma - Version 3

M. S. Viswanathan & T. M. Sounderarajan
Enviar Pesquisar

அடி ராக்கு என் மூக்கு என் கண்ணு என் பல்லு என் ராஜாயி

அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்கச் சிவப்பு
மச்சான இழுக்குதடி
அடி என்னடி ராக்கு
அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்கச் சிவப்பு
மச்சான இழுக்குதடி

அஞ்சாறு ரூவாய்க்கு மணிமால
உன் கழுத்துக்கு பொருத்தமடி
அஞ்சாறு ரூவாய்க்கு மணிமால
உன் கழுத்துக்கு பொருத்தமடி
அம்மூறு மீனாட்சி பாத்தாலும்
அவ கண்ணுக்கு வருத்தமடி
அம்மூறு மீனாட்சி பாத்தாலும்
அவ கண்ணுக்கு வருத்தமடி
சின்னாலப்பட்டியிலே கண்டாங்கி எடுத்து
என் கையாலே கட்டி விடவா
என் அத்தை அவ பெத்த என் மெத்த என் ராக்கம்மா
கொத்தோடு முத்து தரவோ
அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்கச் சிவப்பு
மச்சான இழுக்குதடி

தெய்வான சக்களத்தி வள்ளி குறத்தி
நம்ம கதையிலே இருக்குதடி
தெய்வான சக்களத்தி வள்ளி குறத்தி
நம்ம கதையிலே இருக்குதடி
சிங்கார மதுரையில் வெள்ளையம்மா கதை
தினம் தினம் நடக்குதடி
சிங்கார மதுரையில் வெள்ளையம்மா கதை
தினம் தினம் நடக்குதடி
அடி தப்பாமல் நான் உன்னை சிறையெடுப்பேன்
ஒண்ணு ரெண்டாக இருக்கட்டுமே
என் கண்ணு என் மூக்கு என் பல்லு என் ராஜாயி
கல்யாண வைபோகமே

Observação

Resultado automático

Esta letra foi encontrada automaticamente e pode precisar de revisão.

Quando ela for adicionada ao catálogo principal do EMXStudio, poderá receber tradução, correção, categoria, artista vinculado e informações completas.