Resultado encontrado

Thenmerku Paruva Kaatru

A.R. Rahman feat. Unnikrishnan & K. S. Chithra
Enviar Pesquisar

தென்மேற்குப் பருவக்காற்று
தேனீப்பக்கம் வீசும்போது சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு
சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பொத்தகல்லி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று
பூவெடுக்க

வானோடும் மண்ணோடும்
இல்லாத வண்ணங்கள்
பெண்ணோடும் கண்ணோடும்
நான் காண்கிறேன்

தாலாட்டில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள்
பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்

மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே

மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினைக்கையில் உள்ளூறக் கள்ளூறுதே

தென்மேற்குப் பருவக்காற்று
தேனீப்பக்கம் வீசும்போது சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு
சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பொத்தகல்லி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று
பூவெடுக்க

தென்மேற்குப் பருவக்காற்று
தேனீப்பக்கம் வீசும்போது சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு
சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்

நீ என்றும் நான் என்றும்
இரு வார்த்தை ஒன்றாகி
நாம் என்ற ஓர் வார்த்தை
உண்டானதே

ஆணென்றும் பெண்ணென்றும்
இரு வார்த்தை ஒன்றாகி
ஆள் என்ற ஓர் வார்த்தை
உண்டானதே

காதல் என்ற மந்திரத்தின்
மாயம் என்ன
கல்லும் முள்ளும் இப்போது
பூவானதே

வானவில்லின் துண்டொன்று
மண்ணில் வந்து
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே

தென்மேற்குப் பருவக்காற்று
தேனீப்பக்கம் வீசும்போது சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு
சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பொத்தகல்லி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று
பூவெடுக்க

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்
ஆ... ஆ

Observação

Resultado automático

Esta letra foi encontrada automaticamente e pode precisar de revisão.

Quando ela for adicionada ao catálogo principal do EMXStudio, poderá receber tradução, correção, categoria, artista vinculado e informações completas.