Resultado encontrado

Kanmaniyae Kadhal Enbathu

S. P. Balasubrahmanyam, S. Janaki
Enviar Pesquisar

கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
கன்னங்கள் புது ரோசாப்பூ (ஆ-ஆ)
உன் கண்கள் இரு ஊதாப்பூ (ஆ-ஆ)
இது பூவில் பூத்த பூவையோ
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு

அந்தப்புறம் எந்தப் புறமோ விழி மையிட்டு
அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு
அந்தப்புறம் எந்தப் புறமோ விழி மையிட்டு
அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு

ஆயிரம் பொன் பூக்கும் எந்தன் தேகம் எங்குமே
(லல-லல-லல-லா)
அங்குலம் விடாமல் இன்ப கங்கை பொங்குமே
(லல-லல-லல-லா)
தோளிலும் என் மார்பிலும் கொஞ்சிடும் என் அஞ்சுகம்
நான் நீ ஏது ஹோய் ஹோய்

கண்மணியே பேசு (ம்-ம்) மௌனம் என்ன கூறு
கன்னங்கள் புது ரோசாப்பூ (ஆ-ஆ)
என் கண்கள் இரு ஊதாப்பூ (ம்-ம்)
இது பூவில் பூத்த பூவையே
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு

உன்னைக் கொடு என்னைத் தருவேன் ஒரு தாலாட்டில்
பிள்ளைத் தமிழ் சொல்லித் தருவேன் விழி மூடாமல்
உன்னைக் கொடு என்னைத் தருவேன் ஒரு தாலாட்டில்
பிள்ளைத் தமிழ் சொல்லித் தருவேன் விழி மூடாமல்

கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய்
(லல-லல-லல-லா)
கைகளால் என் பாதம் நீவி ஆறச் செய்கிறாய்
(லல-லல-லல-லா)
வானகம் இவ்வையகம் யாவுமே என் கையகம்
நீ தான் தந்தாய்-ஹோ-ஹோ

கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
கன்னங்கள் புது ரோசாப்பூ (ஆ-ஆ)
உன் கண்கள் இரு ஊதாப்பூ
இது பூவில் பூத்த பூவையே
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு

Observação

Resultado automático

Esta letra foi encontrada automaticamente e pode precisar de revisão.

Quando ela for adicionada ao catálogo principal do EMXStudio, poderá receber tradução, correção, categoria, artista vinculado e informações completas.