Resultado encontrado

Kana Kanden (feat. Pragathi Guruprasad)

Stephen Zechariah
Enviar Pesquisar

கனா கண்டேன் கண்மூடி கொண்டேன்
காதல் மழையில் நனைந்தேன்
வினா ஒன்றை நெஞ்சோடு கேட்டேன்
ஆசை தீயில் அலைந்தேன்

என் கனவெல்லாம் நீ நிஜம்தானா?
உன் நிஜமெல்லாம் நான் பிழைதானா?
நீ மறுத்தாலும் உன்னை மறப்பேனா?
என் விதியே நீதானா?

என் விடியலும் நீதானா?
என் உயிரிலும் நீதானா?
நான் கேட்டிடும் வரமும் நீ
என் தேடல் முடிந்திடும் இடம்தானா?
(என் தேடல் முடிந்திடும் இடம்தானா?)

நீ அருகினில் நான் அணைக்கையில்
நாம் ஓர் உலகத்தில் இருப்போமா?
நீ வீசிடும் உன் சுவாசத்தை
மாரில் இழைவதை ரசிப்போமா?

காணாத சந்தோஷம் நான் காண்கிறேன்
என் தாரம் நீதானடி, ஓ
அழியாத என் காதல் நான் சொல்கிறேன்
நீதானே என் சந்நிதி

உயிரே இறுதிவரை பிரியாதே
பிரிந்தால் நொடிப்பொழுதில் இறப்பேனே
இறந்தும் என்னைவிட்டு விலகாதே
இதயம் கெஞ்சி நிக்குதே

என் முதல் சுகம் நீதானா?
என் வாழ்க்கையின் விலைதானா?
என் ஆழ்மனதினில் துயரம் நீ
என் நெஞ்சில் துடித்திடும் வலிதானா?

என் விடியலும் நீதானா?
என் உயிரிலும் நீதானா?
நான் கேட்டிடும் வரமும் நீ
என் தேடல் முடிந்திடும் இடம்தானா?
என் தேடல் முடிந்திடும் இடம்தானா?

கனா கண்டேன் கண்மூடி கொண்டேன்
காதல் மழையில் நனைந்தேன்
வினா ஒன்றை நெஞ்சோடு கேட்டேன்
ஆசை தீயில் அலைந்தேன்

என் கனவெல்லாம் நீ நிஜம்தானா?
உன் இதயத்திலே நான் சிறைதானா?
இது வலித்தாலும் உன்னை வெறுப்பேனா?
என் விதியே நீதானா?

என் முதல் சுகம் நீதானா?
என் வாழ்க்கையின் விலைதானா?
என் ஆழ்மனதினில் துயரம் நீ
என் நெஞ்சில் துடித்திடும் வலிதானா?
(என் நெஞ்சில் துடித்திடும் வலிதானா?)

Observação

Resultado automático

Esta letra foi encontrada automaticamente e pode precisar de revisão.

Quando ela for adicionada ao catálogo principal do EMXStudio, poderá receber tradução, correção, categoria, artista vinculado e informações completas.