Resultado encontrado

Enna Othaiyila

G.V. Prakash Kumar
Enviar Pesquisar

என்ன ஒத்தயில, நிக்க வச்சுப்புட்டா
ஒரு மகானாகப் பெறந்தாலும் மறியாத செய்யாத பாவியடா
நான் மறு ஜென்மம் எடுத்தாலும் அடச்சிட முடியாத தோல்வியடா

ஏன் ஈரக்கொல ரெண்டா பிஞ்சு ஈரம் சொட்டுதடா
பூமி என்னவிட்டு தூரம் நின்னு வேகம் சுத்துதடா

யாரு கண்ணுப்பட்டோம்?
வீடு ரெண்டுப் பட்டுப் போச்சே
ஒரு மரியாத கொறையாத மனுசங்க இப்போது வீதியில
ஒரு மரமாக வழந்தாலும்
கிளையாக பிறிஞ்சோமே பாதியில

எங்க வீட்டு தேவதையே, காணலயே வேதனதான்
தலைமுற தாண்டி வந்து நீயும் ஒரு பூ வெததான்

கூடுதான் விட்டுப்போன அழகு தெய்வமம்மா
வாசப்படி வந்து நின்னா கொட்டிடும் மழையம்மா

ஒன்னத் தேடி அலையுறேன்
மனம் வாடி கொளையுறேன்
மொகம் பார்ததா உயிர் பெருகும்
கடல் முத்தே நீ

என் கனவெல்லாம் நீதானே நெனவெல்லாம் நீதானே சின்னப்புள்ள
நீ தேரோட போனாலும் தெருவோடுப் போனாலும் எங்கப் பிள்ள

பாசம் மரம் வாடி நிக்க
மோசம் ஒன்னு ஆகிறுச்சே
பாதத்துல முள்ளு தைக்க
பாத மூடிப் போயிறுச்சே

கூட்டமா இருந்த இடம் கொறஞ்சுப் போயிறுச்சே
கோயிலா இருந்த வீடு பிறிஞ்தா... பிறுச்சே

யாரரு சாபம் பட்டுறுச்சோ?
எங்க மனசு கெட்டுறுச்சோ?
அந்த கவல கொஞ்சம் மறைய என்ன செய்வேனோ?

பெறும் பலியோடு வந்தாலும்
வலியோடு வாழ்ந்தாலும் பாசம் வைப்பேன்
இந்தக் கூட்டுக்குள் கொட்டிய திரிஷ்டிக்கு
கண்ணீரில் பொட்டு வைப்பேன்

என்ன ஒத்தயில, நிக்க வச்சுப்புட்டா
ஒரு மகானாகப் பெறந்தாலும் மறியாத செய்யாத பாவியடா
நான் மறு ஜென்மம் எடுத்தாலும் அடச்சிட முடியாத தோல்வியடா

ஏன் ஈரக்கொல ரெண்டா பிஞ்சு ஈரம் சொட்டுதடா
பூமி என்னவிட்டு தூரம் நின்னு வேகம் சுத்துதடா

யாரு கண்ணுப்பட்டோம்?
வீடு ரெண்டுப் பட்டுப் போச்சே
ஒரு மரியாத கொறையாத மனுசங்க இப்போது வீதியில
ஒரு மரமாக வாழந்தாலும்
கிளையாக பிறிஞ்சோமே பாதியில

Observação

Resultado automático

Esta letra foi encontrada automaticamente e pode precisar de revisão.

Quando ela for adicionada ao catálogo principal do EMXStudio, poderá receber tradução, correção, categoria, artista vinculado e informações completas.